/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பராமரிப்பில்லாத சுகாதார வளாகம் பதிவுத்துறை உத்தரவு
/
பராமரிப்பில்லாத சுகாதார வளாகம் பதிவுத்துறை உத்தரவு
பராமரிப்பில்லாத சுகாதார வளாகம் பதிவுத்துறை உத்தரவு
பராமரிப்பில்லாத சுகாதார வளாகம் பதிவுத்துறை உத்தரவு
ADDED : மார் 17, 2025 05:53 AM

சோழவந்தான் : மதுரை மேற்கு ஒன்றியம் தேனுார் ஊராட்சி தச்சம்பத்தில் 2015ல் ரூ.7 லட்சத்தில் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.
பல ஆண்டுகளாக இங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை. இதனால் கழிப்பறை கதவுகள் துருப்பிடித்து மிகவும் சேதமடைந்துள்ளன. கதவுகளை தாழிடும் பகுதியில் சுவர்கள் உடைந்துள்ளது. பெண்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சுகாதார வளாகம் முழுவதும் பாசி படர்ந்து கழிவு நீர் தேங்கியுள்ளதால் உள்ளே செல்ல சிரமப்படுகின்றனர். இதனால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை உள்ளது. இந்த வளாகத்தின் முன் மதுரை மெயின் ரோடு வரை ஊராட்சி நிர்வாகம் குப்பையை கொட்டி வருகிறது. இவ்வளாகத்தை உடனே பராமரிக்க ஒன்றிய நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கின்றனர்.