/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜி.எஸ்.டி., வரிக்குறைப்பு பா.ஜ.,வின் தேர்தல் நாடகம் துணை முதல்வர் உதயநிதி விமர்சனம்
/
ஜி.எஸ்.டி., வரிக்குறைப்பு பா.ஜ.,வின் தேர்தல் நாடகம் துணை முதல்வர் உதயநிதி விமர்சனம்
ஜி.எஸ்.டி., வரிக்குறைப்பு பா.ஜ.,வின் தேர்தல் நாடகம் துணை முதல்வர் உதயநிதி விமர்சனம்
ஜி.எஸ்.டி., வரிக்குறைப்பு பா.ஜ.,வின் தேர்தல் நாடகம் துணை முதல்வர் உதயநிதி விமர்சனம்
ADDED : செப் 25, 2025 03:26 AM
வாடிப்பட்டி : 'ஜி.எஸ்.டி., வரிக்குறைப்பு, பா.ஜ.,வின் தேர்தல் நாடகம்' என்று மதுரை மாவட்டம் அய்யங்கோட்டையில் நடந்த தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
மதுரை சமயநல்லுார் அருகே கட்டப்புளி நகரில் தமிழகத்தில் முதல் முறையாக மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கான 401 இலவச வீடுகள் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை துணை முதல்வர் உதயநிதி பார்வையிட்டு மரக்கன்று நட்டார். கலெக்டர் பிரவீன்குமார், அமைச்சர் மூர்த்தி, தங்கத் தமிழ்ச்செல்வன் எம்.பி., உடனிருந்தனர்.
பின்னர் வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டையில் சோழவந்தான் தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது. மாநில இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இன்பா ரகு, ஜி.பி.ராஜா, வடக்கு மாவட்ட அமைப்பாளர் இளங்கோ முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., வெங்கடேசன் வரவேற்றார்.
இதில் துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:
எய்ம்ஸ் மத்திய அரசின் திட்டம்; அதனால் நானும் பிரபலமடைந்தேன். ஒரு கல்லை வைத்துவிட்டு ஆறு வருடங்களாகியும் இன்னும் கட்டி முடிக்கவில்லை. ஆறு வருடமாக தமிழக மக்களுக்கு பா.ஜ., அரசு எந்தவித நல திட்டத்தையும் செய்யாமல், நமது அழுத்தத்தின் பேரில் எய்ம்ஸ் கட்டப்பட்டு வருகிறது.
பா.ஜ., அரசு தமிழக மக்களுக்கு பல துரோகங்களை செய்து வருகிறது. மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தியது. ரூ.2000 கோடி கொடுப்பதாகவும் கூறியது. அதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாமல், ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் நாங்கள் மும்மொழி கொள்கைக்கு உடன்பட மாட்டோம் என்று நம் முதல்வர் உறுதியாக இருந்தார்
தொகுதி வரையறை செய்து லோக்சபா தொகுதிகள் 39ஐ 32 ஆக குறைக்க முயற்சித்தது; அதையும் நம் முதல்வர் 'லெப்ட் கேண்டில்' சரி செய்து விட்டார்.
தற்போது தேர்தல் காரணமாக பா.ஜ., புது டிராமா போட்டு வருகிறது. ஜி.எஸ்.டி.,யை குறைத்து விட்டோம் என்று கூறுகிறார்கள். பா.ஜ.,வை தமிழக மக்கள் ஒருநாளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தி.மு.க.,வில் இளைஞரணி, விவசாய அணி என 25 அணிகள் உள்ளன. ஆனால் அ.தி.மு.க.,வில் இ.பி.எஸ்., ஓபிஎஸ், டி.டி.வி., சசிகலா அணி என்று 48 அணிகள் உள்ளன.
டில்லி என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதையும் முதல்வர் நிர்ணயிக்கிறார். அ.தி.மு.க., என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை டில்லி முடிவெடுக்கி றது. 2026 தேர்தலில் ஒட்டுமொத்த அ.தி.மு.க.,வை ஊத்தி மூட போகிறார்கள். பச்சை பஸ்சில் செல்லும் பழனிசாமி ஆம்புலன்சை பார்த்தால் கோபம் அடைகிறார். ஒட்டுமொத்த அ.தி.மு.க.,வும் ஆம்புலன்சில் ஏற்றி விடப்படும். இவ்வாறு பேசினார்.