/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விதை நெல் கையிருப்பு விபரம் விவசாயிகள் விருப்பம்
/
விதை நெல் கையிருப்பு விபரம் விவசாயிகள் விருப்பம்
ADDED : ஆக 15, 2025 02:50 AM
மேலுார்: மேலுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தாமரை தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
விவசாயிகள் கிருஷ்ணன், மணி, சாகுல் ஹமீது, பாண்டி உள்ளிட்டோர் பேசியதாவது:
மேலுார் ஒருபோக பாசனத்திற்கு விரைவில் தண்ணீர் திறக்க உள்ளதால் வெள்ளலுார், கரையிப்பட்டி, வெள்ளரிப்பட்டி, புதுசுக்காம்பட்டியில் உள்ள மாயாண்டி, பெரிய கருப்பன், பொட்டக்குளம் கண்மாய்கள் மற்றும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
தி. புதுகுளத்தில் கண்மாயை துார்வாரியவர்கள் மடையை கட்ட வில்லை. விவசாயிகளுக்கு 50 கிலோ விதை நெல் மட்டுமே வழங்கப்படும் என்ற விதிமுறையை தளர்த்தி தேவைக்கு தகுந்தாற் போல் கூடுதலாக விதை நெல் வழங்க வேண்டும். விதை பண்ணையில் கையிருப்பில் உள்ள விதைநெல் குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
புதுசுக்காம்பட்டி சிறுமேளம் கண்மாய் உள்ள சீமை கருவேல மரங்களை தண்ணீர் திறப்பதற்குள் ஏலம் நடத்த வேண்டும். விதைநெல் உற்பத்தி செய்த நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு தரமற்றதாகிவிடும் என்பதால் விற்கக்கூடாது என்றனர்.