UPDATED : அக் 28, 2026 07:21 PM
ADDED : அக் 28, 2026 07:17 PM
மதுரை: தேவர் ஜெயந்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரையில் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., அன்பு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் தென்மண்டல ஐ.ஜி., விஜயேந்திர பிதாரி, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் கலெக்டர்கள், டி.ஐ.ஜி.,க்கள், அம்மாவட்ட எஸ்.பி.,க்கள் பங்கேற்றனர்.
7 டி.ஐ.ஜி.,க்கள், 40 எஸ்.பி.,க்கள் தலைமையில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். கண்காணிப்பு கேமரா, இணையவழி வாகன சரிபார்ப்பு வசதியுடன் 118 வாகனச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. ட்ரோன்கள், நகரும் 480 கண்காணிப்பு கேமராக்கள், மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு அறை பயன்படுத்தப்பட உள்ளன. 460-க்கும் மேற்பட்ட ரோந்து வாகனங்கள், விரைவு நடவடிக்கை குழுக்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
