ADDED : டிச 04, 2024 08:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : திருச்சி மணச்சநல்லுாரைச் சேர்ந்தவர் சண்முகராஜா 72. ஹார்டுவேர் தொழில் செய்து வந்தார்.
திருச்செந்துாருக்கு குடும்பத்துடன் சென்றவர், சுவாமி தரிசனம் செய்தவர் நேற்று மதுரை வந்தார்.
நேற்று மாலை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்தார். காலணி ஸ்டாண்ட் அருகே வந்தவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.