/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாசி தெப்போற்ஸவத்திற்குள் தெப்பக்குளம் சீரமைக்கப்படுமா பக்தர்கள் எதிர்பார்ப்பு
/
மாசி தெப்போற்ஸவத்திற்குள் தெப்பக்குளம் சீரமைக்கப்படுமா பக்தர்கள் எதிர்பார்ப்பு
மாசி தெப்போற்ஸவத்திற்குள் தெப்பக்குளம் சீரமைக்கப்படுமா பக்தர்கள் எதிர்பார்ப்பு
மாசி தெப்போற்ஸவத்திற்குள் தெப்பக்குளம் சீரமைக்கப்படுமா பக்தர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 21, 2025 06:14 AM

பொய்கைக்கரைப்பட்டி: 'பொய்கைக்கரைப்பட்டி தெப்பக்குளத்தில் சிதிலமடைந்த மண்டபத்தை மாசி தெப்போற்ஸவத்திற்குள் சீரமைக்க வேண்டும்' என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அழகர்கோவில் அருகே பொய்கைக்கரைப்பட்டி தெப்பக்குளத்தில் மாசி மாதம் தெப்போற்ஸவம் நடைபெறும். கள்ளழகர் தெப்பத்தில் எழுந்தருளுவார். இந்நிலையில் தெப்பக்குளத்தின் மைய மண்டபம், படிக்கட்டுகள் சிதிலமடைந்தும், செடிகள் முளைத்தும், தண்ணீரில் அல்லி செடிகள் வளர்ந்தும், பிளாஸ்டிக் குப்பையால் சுகாதார கேடுடன் உள்ளது. தெப்பத் திருவிழாவிற்கு முன் இவற்றை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
அவர்கள் கூறியதாவது: போதிய மழையின்றி தெப்பக்குளத்தில் கள்ளந்திரி வாய்க்காலில் இருந்து மோட்டார் பம்ப் மூலம் தண்ணீர் நிரப்பப்படுகிறது. இங்குள்ள மையமண்டபத்தின் கோபுரம், துாண்கள், தெப்பக்குளத்தைசுற்றியுள்ள படிக்கட்டுகள் சிதிலமடைந்த நிலையில்உள்ளது. கடந்தாண்டு திருவிழாவின் போது சீரமைப்பு பணிக்காக தெப்பத்தில் தண்ணீர் நிரப்பாமல் இருந்தனர். கடைசி வரை சீரமைக்கவும் இல்லை.
தண்ணீர் இல்லாததால் தெப்பக்குளத்தைமூன்று முறை சுற்றி கள்ளழகர் சென்றுவிட்டார். இந்தாண்டும் அதே நிலை நீடிக்காமல் போதுமான நிதி பெற்றுசீரமைப்புப் பணிகளை கோயில் நிர்வாகம்உடனே துவங்க வேண்டும் என்றனர்.
கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில், ''தெப்பக்குளத்தை சீரமைக்கும் பணிக்கான மதிப்பீடு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது. நிதி கிடைத்ததும் பணிகள் துவங்கும்'' என்றனர்.

