/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பொய்கைக்கரைப்பட்டியில் ஸ்ரீ மஹா பெரியவா கோயில் திருப்பணியில் பக்தர்களும் பங்கேற்கலாம்
/
பொய்கைக்கரைப்பட்டியில் ஸ்ரீ மஹா பெரியவா கோயில் திருப்பணியில் பக்தர்களும் பங்கேற்கலாம்
பொய்கைக்கரைப்பட்டியில் ஸ்ரீ மஹா பெரியவா கோயில் திருப்பணியில் பக்தர்களும் பங்கேற்கலாம்
பொய்கைக்கரைப்பட்டியில் ஸ்ரீ மஹா பெரியவா கோயில் திருப்பணியில் பக்தர்களும் பங்கேற்கலாம்
ADDED : அக் 01, 2025 09:10 AM
'ம துரை அழகர் கோவில் அருகே பொய்கை கரைப்பட்டியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீ மஹா பெரியவா திருக்கோயில் பணிக்கு பக்தர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கலாம்' என்று மதுரை அனுஷத்தின் அனுகிரகம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: தமிழகத்தில் மதுரையைத் தவிர்த்து விட்டு, புண்ணியத் தலங்களைப் பட்டியலிட இயலாது. மஹாவிஷ்ணு 'கள்ளழகனாக'க் குடியிருக்கும் 108 திருப்பதிகளில் ஒன்று கள்ளழகர் திருக்கோயில். அக்கோயில் தெப்பக்குளம் அமைந்துள்ள எழில் மிகுந்த 'பொய்கை கரைப்பட்டி'யில், 'ஜகத்குரு' காஞ்சி மஹா பெரியவருக்கு பெரிய தனிக்கோயில் ஒன்றைக் கட்டுகிறது 'அனுஷத்தின் அனுக்கிரகம்' டிரஸ்ட்.
மஹா பெரியவா என பக்தர்களால் அழைக்கப்படும் காஞ்சி ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு, 'காஞ்சி பெரியவர் கிருஹம்' (இல்லம் வடிவில் கோயில்) மதுரை எஸ்.எஸ்.காலனியில் அமைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக வாரந்தோறும் வியாழன் அன்று குருபூஜை வைபவமும், 165 மாதங்களாக அனுஷம் வைபவமும் மிகச் சிறப்பாக நடக்கிறது. காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவர் பயன்படுத்திய பாதுகையும் இங்கே உள்ளது. மேற்கண்ட நாளில் காஞ்சிப்பெரியவரின் விக்கிரகம், பாதுகைக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடக்கிறது.
இதனையே கோயிலாகக் கட்ட வேண்டும் என்று மஹா பெரியவா கனவில் அருள் பாலித்த உத்தரவை ஏற்று, அழகர் கோயில் மலை அடிவாரத்தில் கோயில் கட்டும் பணிகள் தொடங்கி உள்ளன. மார்ச் 6 ல், வாஸ்து, பூர்வாங்க பூஜைகள் முடித்து, அரசின் தடையில்லா சான்று உட்பட அனுமதிகள் பெறப்பட்டன. செப். 7, ஆவணி பவுர்ணமியன்று, 11 வேத விற்பன்னர்களோடு பூமி நிர்மாண ஸ்தாபிதம், தேவதை பிரார்த்தனை, மஹன்யாசம், ருத்ர பாராயணம், அர்ச்சனை, விசேஷ ஹோமம், பூஜை மற்றும் அபிஷேகங்கள் செய்து திருப்பணிகள் தொடங்கியுள்ளன.
முழுக்க முழுக்க ஸ்ரீ மஹா பெரியவரின் அனுக்கிரகம் பெற்ற பக்தர்களின் பங்களிப்பால் மட்டுமே கோயில் திருப்பணிகள் பூர்த்தி பெறும். பக்தர்களின் கைங்கரியத்தால் இடம் வாங்கி, மின் இணைப்பு, குடிநீர் ஆழ்குழாய் போடப்பட்டு, வானம் தோண்டி அஸ்திவாரப் பணிகள் நடக்கிறது என்றார்.
யாருக்கு பாக்கியமும் பிராப்தமும் இருக்கிறதோ அவர்களால் மட்டுமே இந்த திருப்பணிக்கு உதவ முடியும். காஞ்சி பெரியவர் கோயில் திருப்பணி செலவுகள் ரூ.பல லட்சங்களைத் தாண்டுவதால், ஒரு சதுர அடிக்கு ரூ.3500 வீதம் பக்தர்கள் நன்கொடை வழங்கலாம். சிமென்ட், மணல், செங்கல், கருங்கல், இரும்புக் கம்பிகள் என கட்டுமான சாமான்களாகவும் கொடுக்கலாம்.
ரூ.ஒரு லட்சம் அதற்கு மேல் வழங்குவோரின் பெயர்கள் மஹாபெரியவா கோயில் கல்வெட்டில் பொறிக்கப்படும். விவரங்களுக்கு 94426 30815 என்ற எண்ணில் பேசலாம். அந்த எண்ணில் திருப்பணிக்கு பணம் அனுப்பலாம்.