/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இயற்கை விளைபொருட்களுக்கு மதுரையில் நிரந்தர சந்தை அமைச்சர் மூர்த்தி தகவல்
/
இயற்கை விளைபொருட்களுக்கு மதுரையில் நிரந்தர சந்தை அமைச்சர் மூர்த்தி தகவல்
இயற்கை விளைபொருட்களுக்கு மதுரையில் நிரந்தர சந்தை அமைச்சர் மூர்த்தி தகவல்
இயற்கை விளைபொருட்களுக்கு மதுரையில் நிரந்தர சந்தை அமைச்சர் மூர்த்தி தகவல்
ADDED : அக் 01, 2025 08:03 AM
மதுரை : ''மதுரையில் இயற்கை விளைபொருட்களுக்கான நிரந்தர சந்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக'' அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
மதுரை கிரசன்ட் கல்லுாரியில் ரூ.ஒரு கோடி மதிப்பிலான இன்குபேட்டர் தொழில் மைய துவக்கவிழா நடந்தது.
அமைச்சர்கள் அன்பரசன், மூர்த்தி தலைமையில் இம்மையத்துடன் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:
இன்னும் ஐந்தாண்டுகளில் எல்லோருமே விவசாயத்தின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்புவர். மதுரை தமுக்கம் மைதானத்தில் 15 நாட்களுக்குள் இயற்கை விளைபொருட்களை மதிப்பு கூட்டி தொழில் செய்வோருக்கான இரண்டு நாட்கள் சந்தை அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.
காந்தி மியூசியத்தில் சனிக்கிழமைகளில் மட்டும் இயற்கை சந்தை அமைக்கப்படுகிறது. ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து நிரந்தர சந்தை அமைக்கப்படும்.
தொழில் நிறுவனங்களுக்கான நில வகைப்பாட்டியல் திட்டத்தில் மாற்றம் செய்து 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கப்பட்டு டிசம்பருக்குள் கொண்டு வரப்படும். மதுரை 'மாஸ்டர் பிளான்' திட்டத்தின் கீழ் 30 கி.மீ., எல்லைக்குள் எங்கு வேண்டுமானாலும் தொழில் செய்யலாம். இனிமேல் நில வகைப்பாட்டு திட்டம் குறித்து தொழில்துறையினர் கவலைப்பட வேண்டாம் என்றார்.
கலெக்டர் பிரவீன்குமார், வெங்கடேசன் எம்.எல்.ஏ., இன்குபேஷன் மையம், கல்லுாரி நிர்வாகிகள் அப்துல் காதிர், ரஹ்மான் புகாரி, அகமது புகாரி, பர்வேஸ் ஆலம், நிஷா முகுந்த், ஸ்டார்ட் அப் சி.இ.ஓ., சிவராஜா கலந்து கொண்டனர்.