/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆசிரம பாதை அடைப்பு போலீசில் பக்தர்கள் புகார்
/
ஆசிரம பாதை அடைப்பு போலீசில் பக்தர்கள் புகார்
ADDED : நவ 02, 2025 03:51 AM
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அருவி முன்பாக ரமணகிரி ஆசிரமத்திற்கு மண் சாலை உள்ளது.
இந்த ஆசிரமம் வழியாக ஓடையை கடந்து மறுகரையில் உள்ள சாஸ்வானந்த சுவாமிகள் மடத்திற்கும் பக்தர்கள், மா தோப்பு வைத்துள்ள விவசாயிகள் சென்று வந்தனர். கடந்த ஆண்டு சாஸ்வானந்த சுவாமிகள் ஜீவசமாதி அடைந்ததால் அங்கு தற்போது மணிமண்டபம் கட்டுமான பணி நடக்கிறது. சில நாட்களுக்கு முன் ரமணகிரி ஆசிரம நிர்வாகத்தினர் பாதையை அடைத்தனர்.
இதனால் பக்தர்கள், விவசாயிகள் பாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
ஆசிரமத்தை முற்றுகையிட்டு பொறுப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால் வாடிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர்.

