ADDED : ஆக 09, 2025 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு நேற்று பக்தர்கள் அதிக அளவில் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து தற்போது மண்டல பூஜை நடக்கிறது. வழக்கமாக பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் அதிகளவில் வருவர்.
நேற்று ஆடி பவுர்ணமி, வரலட்சுமி நோன்பு என்பதால் பல ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர். இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

