/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நேர்த்திக்கடன் பக்தர்கள் அக்னிசட்டி ஊர்வலம்
/
நேர்த்திக்கடன் பக்தர்கள் அக்னிசட்டி ஊர்வலம்
ADDED : ஜன 01, 2026 05:48 AM

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் காளியம்மன் கோயில் பொங்கல் உற்ஸவ விழா டிச.16ல் செவ்வாய் சாட்டுதலுடன் துவங்கியது.
டிச.30 இரவு சாமியாடிகள், பூஜாரிகள், பக்தர்கள் சாத்தையாறு ஆற்றில் சக்தி கரகம் ஜோடித்து அம்மனை கோயில் அழைத்து வந்தனர். சக்தி கிடா வெட்டி வழிபாடு செய்தனர். காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் நேற்று கேட் கடை விநாயகர் கோயில் உட்பட கிராம கோயில்களில் இருந்து அலகுகுத்தி, அக்னிச்சட்டி, பால்குடம் எடுத்து, கரும்புத் தொட்டில் சுமந்தும், கரும்புள்ளி செம்புள்ளி குத்தி குழந்தைகள் ஊர்வலமாக வந்து முனியாண்டி, முத்தாலம்மன் கோயிலில் வழிபாடு செய்தனர்.
பின் காளியம்மன் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். திரளான பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தும் வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. எம்.எல்.ஏ., வெங்கடேசன், தி.மு.க., நிர்வாகிகள் ரகுபதி, தன்ராஜ், அறங்காவலர் குழு தலைவர் அமுல் ராணி உட்பட பலர் பங்கேற்றனர்.

