/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
படித்தது 'அக்குபஞ்சர்' பார்த்தது 'அலோபதி'
/
படித்தது 'அக்குபஞ்சர்' பார்த்தது 'அலோபதி'
ADDED : ஜன 01, 2026 05:48 AM
திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் திருப்பதி நகரில் தமிழ்ச்செல்வி என்பவர் அக்குபஞ்சர் மருத்துவம் படித்துவிட்டு 'அலோபதி' வைத்தியம் பார்ப்பதாக புகார்கள் கிளம்பின.
ஆங்கில மருந்து, மாத்திரைகள், ஊசிகளை பயன்படுத்தியதாக தகவல் கிடைத்ததால், மாவட்ட சுகாதார இணை இயக்குனர் செல்வராஜ், திருப்பரங்குன்றம் தலைமை மருத்துவர் நரேந்திரன் குழுவினர் நேற்று தமிழ்ச்செல்வி வீட்டுக்குச் சென்று விசாரணை செய்தனர். அவர் ஆங்கில மருத்துவ சிகிச்சையை செய்தது உறுதியானது. திருப்பரங்குன்றம் தலைமை டாக்டர் நரேந்திரன் ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் அளித்தார். மருந்துகள், ஊசிகளை கைப்பற்றி போலீசார், சுகாதார துறையினர் விசாரிக்கின்றனர்.

