/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தடதடத்து செல்லும் வாகனங்கள்; தெருவிளக்கின்றி தவிக்கும் பக்தர்கள்
/
தடதடத்து செல்லும் வாகனங்கள்; தெருவிளக்கின்றி தவிக்கும் பக்தர்கள்
தடதடத்து செல்லும் வாகனங்கள்; தெருவிளக்கின்றி தவிக்கும் பக்தர்கள்
தடதடத்து செல்லும் வாகனங்கள்; தெருவிளக்கின்றி தவிக்கும் பக்தர்கள்
ADDED : ஆக 20, 2025 01:42 AM

சோழவந்தான்; நடுமுதலைகுளம் பஸ் ஸ்டாண்ட் முதல் கொசவபட்டி வரை செல்லும் ரோட்டை சீரமைத்து அதில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
அப்பகுதி போஸ்: நடுமுதலைக்குளம் பஸ் ஸ்டாண்டில் இருந்து கொசவபட்டி வரை கண்மாய்க் கரையில் ரோடு அமைக்கப்பட்டது. இங்கு அமைந்துள்ள முதலைக்குளம் கருப்பணசாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த ரோட்டையே பயன்படுத்துகின்றனர்.
மேலும் சுற்று வட்டார மக்களின் போக்குவரத்திற்கு முக்கிய வழித்தடமாக இது உள்ளது. தற்போது மிக மோசமாக சேதமடைந்து ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்கள் தடதடத்து செல்கின்றன.
செவ்வாய், வெள்ளி கிழமைகளில் அதிகாலையில் பக்தர்கள் கோயிலுக்கு நடந்துச் செல்வர். இப்பகுதியில் தெரு விளக்குகள் அமைக்கப்படாததால் சிரமம் அடைகின்றனர். விஷ ஜந்துக்களால் ஆபத்தும், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத நிலையும் உள்ளது. ஒன்றிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.