/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அவசரகால வாகனங்கள் தடையின்றிசெல்வதை உறுதி செய்ய வேண்டும் உயர்நீதிமன்றத்தில் டி.ஜி.பி.,தகவல்
/
அவசரகால வாகனங்கள் தடையின்றிசெல்வதை உறுதி செய்ய வேண்டும் உயர்நீதிமன்றத்தில் டி.ஜி.பி.,தகவல்
அவசரகால வாகனங்கள் தடையின்றிசெல்வதை உறுதி செய்ய வேண்டும் உயர்நீதிமன்றத்தில் டி.ஜி.பி.,தகவல்
அவசரகால வாகனங்கள் தடையின்றிசெல்வதை உறுதி செய்ய வேண்டும் உயர்நீதிமன்றத்தில் டி.ஜி.பி.,தகவல்
ADDED : செப் 13, 2025 05:32 AM
மதுரை: 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி தாக்கலான வழக்கில்,'அவசரகால வாகனங்கள் தடையின்றி சுமூகமாக கடந்து செல்வதை உறுதி செய்ய வழிகாட்டுதல் பிறப்பிக்கப்பட்டுள்ளது,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் டி.ஜி.பி., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மாநில பொதுச் செயலாளர் இருளாண்டி தாக்கல் செய்த பொதுநல மனு:அ.தி.மு.க.,பொதுச் செயலாளர் பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' பிரசார பயணத்தை வேலுார் மாவட்டம் அணைக்கட்டு, திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் மேற்கொண்டார். அவ்வழியாகச் சென்ற 108 ஆம்புலன்ஸ் மற்றும் அதிலிருந்த ஊழியர்களை அ.தி.மு.க.,வினர் சிலர் தாக்கினர். இதனால் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.2026 ல் தமிழக சட்டசபை தேர்தல் முடியும் வரை, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்கக்கோரி டி.ஜி.பி.,க்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது.மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஹாரூன் ரஷீத் ஆஜரானார்.
அரசு வழக்கறிஞர்கள் செந்தில்குமார், கோட்டைச்சாமி ஆஜராகி டி.ஜி.பி., செப்.6ல் அனைத்து போலீஸ் கமிஷனர்கள், எஸ்.பி.,களுக்கு வழிகாட்டுதல் பிறப்பித்துள்ளார் எனக்கூறி ஆவணம் தாக்கல் செய்தனர். அதில் தெரிவித்துள்ளதாவது: போக்குவரத்து அதிகமுள்ள சாலைகளில் போராட்டம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கக்கூடாது. தவிர்க்க முடியாதபட்சத்தில் அனுமதிக்கும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆம்புலன்ஸ்கள், தீயணைப்புத்துறை உள்ளிட்ட அவசரகால வாகனங்கள் தடையின்றி சுமூகமாக கடந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும். மாற்று வழித்தடங்களை சரி செய்து வைக்க வேண்டும்.பொதுக்கூட்டங்களில் அசம்பாவிதத்தை தவிர்க்க பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெரிய அளவிலான பொதுக்கூட்டம், போராட்டம் நடந்தால் அருகிலுள்ள மருத்துவமனைகள், தீயணைப்பு நிலையங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிபதிகள் செப்.15 க்கு ஒத்திவைத்தனர்.