ADDED : டிச 22, 2024 07:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் தர்ம சாஸ்தா கோயில் 52ம் ஆண்டு உற்ஸவ விழா மூன்று நாட்கள் நடந்தன. முதல் நாள் திருப்பள்ளி எழுச்சி, மங்கல இசை நிகழ்ச்சிகள் நடந்தன. 2ம் நாள் நவநீத கண்ணன் மாதர் பஜனை குழுவினரின் 1008 விளக்கு பூஜையும், 3ம் நாள் கணபதி ஹோமத்துடன் சிறப்பு யாக பூஜைகளும் துவங்கின. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
உச்சிகால பூஜை, பஜனை நிகழ்ச்சிகளை தொடர்ந்து மாலை வான வேடிக்கையுடன் ஐயப்பன், முருக பக்தர்களுடனும், பாலாஜி ராமானுஜ சுவாமி குழுவினர் பஜனையுடனும் மின்னொளி சப்பரத்தில் சுவாமி நகர்வலம் நடந்தது.
ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சீனிவாசன், பக்தி பணி, விழா குழுவினர் செய்திருந்தனர்.