/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
துாய்மை பணிக்கான துட்டு கிடைத்தது தினமலர் செய்தி எதிரொலி
/
துாய்மை பணிக்கான துட்டு கிடைத்தது தினமலர் செய்தி எதிரொலி
துாய்மை பணிக்கான துட்டு கிடைத்தது தினமலர் செய்தி எதிரொலி
துாய்மை பணிக்கான துட்டு கிடைத்தது தினமலர் செய்தி எதிரொலி
ADDED : ஜன 20, 2024 05:11 AM
மதுரை: தினமலர் செய்தி எதிரொலியாக மதுரையில் 'எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தின்' கீழ் நடந்த துாய்மை பணி மேற்கொண்டதற்கான செலவுத் தொகை 15 வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் (பி.இ.ஓ.,க்கள்) வழங்கப்பட்டது.
மாவட்டத்தில் அனைத்து அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகளிலும் ஜன.,8 முதல் 10 வரை துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகளுக்கு ஒரு பள்ளிக்கு தலா ரூ.ஆயிரம் வீதம் அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால் பள்ளிகளுக்கு அத்தொகை விடுவிக்கவில்லை. இதனால் தலைமையாசிரியர்கள் தங்கள் சொந்த பணத்தை செலவிட்டு பணிகளை மேற்கொண்டனர். 10 நாட்களுக்கும் மேல் ஆகியும் அரசு ஒதுக்கிய நிதி பள்ளிகளுக்கு வந்துசேரவில்லை.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அனைத்து அரசு, ஊராட்சி தொடக்கப் பள்ளிகளுக்கும் சம்பந்தப்பட்ட பி.இ.ஓ.,க்களின் வங்கி கணக்குகளில் தொகை செலுத்தப்பட்டது.
கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், பி.இ.ஓ., அலுவலகங்கள் சார்பில் துாய்மைப் பணிக்கான செலவுத் தொகை சில நாட்களில் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என்றார்.