/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திரும்பத் திரும்ப குழி தோண்டுறாங்க...
/
திரும்பத் திரும்ப குழி தோண்டுறாங்க...
ADDED : செப் 27, 2024 07:03 AM

மேலுார்: மேலுார் பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் சப்ளை செய்வதற்காக தோண்டப்படும் பள்ளங்களை மூடாததால் விபத்து அதிகரித்து வருகிறது.
இப்பகுதி மக்களுக்காக திருச்சி அருகே குளித்தலையில் இருந்து 14 ஆண்டுகளுக்கு முன் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு காந்திஜி பூங்கா நீரேற்று நிலையம் மூலம் சப்ளை செய்யப்படுகிறது.
ஏற்கனவே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தினமும் ஒரு நபருக்கு 40 லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஜல் ஜீவன் திட்டம் மூலம் கூடுதலாக 15 லிட்டர் தண்ணீர் வழங்க ரூ. 127 கோடியில் இரும்பு குழாய்கள் பதிக்கின்றனர்.
இதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடாததால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
காவிரி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் குழாய்கள் பதித்த பிறகு சோதனை செய்வதற்காக குறிப்பிட்ட இடங்களை மூடவில்லை. போக்குவரத்து நெரிசல், விபத்தை தவிர்க்க ரோட்டை சரி செய்ய வேண்டும் என்றனர்.
அதிகாரிகள் கூறுகையில், ''போர்கால அடிப்படையில் குழாய்கள் பதிக்கிறோம். பணி முடிந்ததும் கான்கிரீட் கலவை கொண்டு ரோடு சரி செய்யப்படும்'' என்றனர்.

