/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டிஜிட்டல் குற்ற விழிப்புணர்வு கூட்டம்
/
டிஜிட்டல் குற்ற விழிப்புணர்வு கூட்டம்
ADDED : மார் 23, 2025 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை கோமதிபுரம் தென்றல்நகர் குடியிருப்போர் சங்கம் சார்பில் டிஜிட்டல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் தலைவர் ராகவன் தலைமையில் நடந்தது.
செயலாளர் பழனிக்குமார் வரவேற்றார். சைபர் கிரைம் ஏ.எஸ்.பி., கருப்பையா பேசுகையில், அலைபேசி, வாட்ஸ்ஆப், பேஸ்புக் நவீன தொழில்நுட்பம் மூலம் நடைபெறும் குற்றங்களில் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்' என்றார். எஸ்.ஐ., கார்த்திகேயன், பொருளாளர் ஆர்.எம். காசி, இணைச் செயலாளர்கள் திரவியம், சங்கர், ஆலோசகர்கள் பாண்டி, எம்.காசி, சுதர்சனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர் நரசிம்மராஜ் நன்றி கூறினார்.