ADDED : ஜூன் 24, 2025 03:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் டிஜிட்டல் புகைப்படம் எடுத்தல் குறித்த கருத்தரங்கு நடந்தது.
செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், முதல்வர் பொன்னி முன்னிலை வகித்தனர். மாணவி மெகர் நிஷா பேகம் வரவேற்றார்.
புகைப்பட நிபுணர் பாரதி பயிற்சி அளித்தார். 200க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர். மாணவி விஜய சிவசங்கரி நன்றி கூறினார்.