/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பயிர்களுக்கான ‛'டிஜிட்டல் சர்வே' பணி தொடக்கம் விவசாய கல்லுாரி மாணவர்கள் மூலம்

ADDED : நவ 07, 2024 02:29 AM

மதுரை: வேளாண் துறை சார்பில் விவசாயிகள் என்ன வகையான பயிர் சாகுபடி செய்துள்ளனர் என்பதை கண்டறிந்து அதை 'அடங்கல்' செயலியில் பதிவேற்றம் செய்யும் 'டிஜிட்டல் சர்வே' பணி மதுரையில் நேற்று தொடங்கியது.
மதுரை மேலுாரில் வேப்படப்பு, உசிலம்பட்டியில் கல்லுாத்து, செல்லம்பட்டியில் புள்ளனேரி கிராமங்கள் சர்வே பணிக்கு நேற்று தேர்வு செய்யப்பட்டன. வேப்படப்பு கிராமத்தில் தோட்டக்கலைத் துறை கூடுதல் இயக்குநர் ராம் பிரசாத் தொடங்கி வைத்தார். வேளாண் துறை இணை இயக்குநர், துணை இயக்குநர் அமுதன், தோட்டக்கலை துணை இயக்குநர் பிரபா, விவசாய கல்லுாரி டீன் மகேந்திரன் கலந்து கொண்டனர்.
இணை இயக்குநர் சுப்புராஜ் கூறியதாவது:
மதுரை விவசாய கல்லுாரி, உசிலம்பட்டி கிருஷ்ணா விவசாய கல்லுாரி, திண்டுக்கல் ஆர்.வி.எஸ்.தோட்டக்கலை கல்லுாரி, தேனி விவசாய மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் 'அடங்கல்' செயலியை மாணவர்களின் அலைபேசியில் பதிவிறக்கம் செய்துள்ளனர். ஏற்கனவே தமிழ்நிலம் செயலியில் விவசாயிகளின் நிலம், சர்வே, உட்பிரிவு விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நிலங்களில் 21 மீட்டர் துல்லியத்தில் மாணவர்கள் நின்று என்ன பயிரிட்டுள்ளனர் எவ்வளவு ஏக்கரில் உள்ளது என்பதை நேரடியாக பார்த்து 'அடங்கல்' செயலியில் பதிவேற்றம் செய்வர். நவ. 22 வரை சர்வே பணிகள் நடைபெறும் என்றார்.