/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பாழடைந்த வளாகம்; பாழாகும் சுகாதாரம்
/
பாழடைந்த வளாகம்; பாழாகும் சுகாதாரம்
ADDED : ஜன 10, 2026 07:00 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே மேலக்காலில் பாழடைந்த மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
அப்பகுதி சிதம்பரம்: இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் வசிக்கின்றனர். ஆரம்ப சுகாதார நிலையம் அருகே 10 ஆண்டுக்கு முன் கட்டிய மகளிர் சுகாதார வளாகம் அமைந்து உள்ளது. மூன்று ஆண்டுகளாக பராமரிப்பின்றி பாழடைந்துள்ளது. செடி, கொடிகள் அடர்ந்து புதர் போன்று காட்சியளிக்கிறது.
தெருநாய்கள், பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் வசிப் பிடமாகவும் மாறிவிட்டது. இதனால் பெண்கள் திறந்தவெளியை பயன்படுத்தும் நிலை உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

