/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தினமலர் பிறந்த நாள் பேட்டி் - விருதுநகர் மாவட்டம்
/
தினமலர் பிறந்த நாள் பேட்டி் - விருதுநகர் மாவட்டம்
ADDED : செப் 06, 2024 05:19 AM

உள்ளதை உள்ளபடி
நான் பிளஸ் 2 படித்த காலத்தில் இருந்து தற்போது வரை 32 ஆண்டுகளாக தினமலர் வாசகர். தமிழ் நாளிதழ்களிலேயே உள்ளதை உள்ளபடி, படிப்பவர்களுக்கு எளிமையாக புரியம் வகையில் செய்திகளை வெளியிடுவதில் தினமலர் நாளிதழ் நம்பர் ஒன். ஞாயிற்றுக்கிழமை நாளிதழில் வரும் டாக்டரை கேளுங்கள் பகுதியில் உடலில் ஏற்படும் பிரச்னைகள் பற்றிய மக்களின் கேள்விகள், அதற்கான ஆலோனை, சிகிச்சை முறை குறித்து டாக்டர்கள் அளிக்கும் விளக்கத்தால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
எஸ்.சத்தியசீலன் சித்த மருத்துவர், விருதுநகர்
மக்கள் விரும்பும் நாளிதழ்
நான் கடந்த 40 ஆண்டுகளாக தினமலர் முகவராக உள்ளேன். துார்தர்ஷனில் மகாபாரதம் தொடர் ஹிந்தியில் ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு வெளியான போது, அதன் தமிழ் அர்த்தம் அன்று காலை காலை 7:00 மணிக்கு தினமலர் நாளிதழில் வந்து விடும். வாசகர்கள் நாளிதழை கையில் வைத்து கொண்டு தொலைக்காட்சி தொடரை பார்த்து அர்த்தம் தெரிந்து கொண்ட நாட்களும் உண்டு. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., இறந்த போது, அவரின் படத்துடன் கூடிய பிரத்யேக பக்கங்கள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இதை வாங்கி சென்றவர்கள் போட்டோவாக பிரேம் செய்து வீட்டில் வைத்தனர். அன்று முதல் இன்று வரை முகவர்களுக்கு முழு ஒத்துழைப்பை நிறுவனம் வழங்கி வருகிறது. செய்திகள் எளிமையாக புரியும் படி இருப்பதால் மக்கள் விரும்பி வாங்கி படிக்கின்றனர்.
என். கவுதமன், தினமலர் ஏஜன்ட், விருதுநகர்
களத்தில் இருந்து உதவும்
அரசு நிர்வாகம், அதிகாரிகள், ஊழியர்கள், மக்கள் என நான்கு தரப்பு இடையே பாலமாக செயல்பட கூடிய நாளிதழ். அரசியல், விளையாட்டு, கலைத்துறை, சமூக பிரச்னைகள் என எல்லாவற்றையும் உள்ளடக்கிய நாளிதழாக தான் பார்க்கிறேன். இன்றைய காலகட்டத்தில் அரசு ஊழியர்கள் பிரச்னையை கண்டறிந்து செய்தி வெளியிடுவது எங்களுக்கு ஆறுதலாக உள்ளது. எங்களுக்கான உதவியை களத்தில் இருந்து தினமலர் செய்து வருகிறது.
ராஜகோபாலன், தலைவர், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம், விருதுநகர்.
தோழனாக, துணைவனாக
தினமலர் சிறுவர் மலர், கல்வி மலர், மாணவர் பதிப்பு, பட்டம் போன்றவை மாணவர்களை தகுதிப்படுத்துகிறது. நல்ல பண்புகளை கொண்ட, தலைசிறந்த மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களை தேர்வு செய்து, ஆண்டுதோறும் விருது வழங்கி சிறப்பு செய்கிறது. மொத்தத்தில் தினமலர் நாளிதழ் மாணவர்களின் தோழனாகவும், ஆசிரியர்களின் துணைவனாகவும், பெற்றோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாகவும் உள்ளது.
கருணை தாஸ் தேசிய நல்லாசிரியர், சிவகாசி.
வாசகன் என்பதில் பெருமை
உண்மையை உயர்த்தி நீதியை நிலை நிறுத்தி தரமான செய்திகளை வாசகர்களுக்கு வழங்குவதில் தனக்கு நிகர் தானே என்ற பெருமைக்கு உறவாய் நிற்கும் தினமலர் நாளிதழ் நாளும் பல சிந்தனையாளர்களையும் சமூக அக்கறையாளர்களையும் உருவாக்குகிறது என்றால் அது மிகை அல்ல. 74 வது ஆண்டில் தடம் பதிக்கும் தரமான நாளிதழின் தலைமுறை கடந்த வாசகர் என்பதில் பெருமை கொள்கிறேன்.
ஜெயசங்கர் காலண்டர் உரிமையாளர், சிவகாசி
அரிய தகவல்களை கொண்டது
நான் கடந்த 10 ஆண்டுகளாக தினமலர் வாசகர். நாளிதழை படிக்காமல் வீட்டில் பணிகள் துவங்குவதில்லை. செய்திகள் சரியானதாகவும், பிற நாளிதழ்களில் இடம் பெறாத அரிய தகவல்களை கொண்டு சிறப்பாக உள்ளது. குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கான அன்றாட தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள முடிகிறது. ஆன்மிகமலரை படிக்கும் போது கடவுள் மீதான பற்று அதிகரிக்கிறது.
எம். பிரபாவதி குடும்பத் தலைவி, விருதுநகர்.