ADDED : செப் 28, 2011 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மேலூர் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சாமி.
திருமங்கலம் இடைத்தேர்தலின்
போது மதுரை ரிங் ரோட்டில் இவரை தாக்கி, தேர்தல் பணி செய்யவிடாமல் தடுத்ததாக
அப்போதைய எஸ்.பி., மனோகரன், டி.எஸ்.பி., ஷாஜகான், இன்ஸ்பெக்டர்
ராமகிருஷ்ணன், எஸ்.ஐ., சத்தியபிரபா ஆகியோர் மீது சாமி வழக்கு தொடர்ந்தார்.
நேற்று இவ்வழக்கு கூடுதல் முதலாவது செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது முன்னாள் டி.எஸ்.பி., ஷாஜகான் மட்டும் ஆஜரானார். பிற 3 போலீஸ்
அதிகாரிகளும் தேர்தல் பணி காரணமாக வரஇயலவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி ராஜசேகரன் விசாரணையை அக்.31 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.