ADDED : செப் 28, 2011 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மாநகராட்சி தேர்தல் காங்.,மேயர் வேட்பாளராக சிலுவை, 54,
அறிவிக்கப்பட்டுள்ளார்.
எம்.ஏ.,படித்துள்ளார். தொழில் ரியல் எஸ்டேட். 1996
முதல் தற்போது வரை கவுன்சிலர். நகர் காங்.,பொதுச் செயலாளராக 10 ஆண்டுகள்
இருந்துள்ளார். தற்போது மாநில பொதுக்குழு உறுப்பினர். சிலுவை
கூறுகையில்,''மாநகராட்சி நிர்வாகம் தொடர்பான அனைத்து விஷயங்களும் எனக்குத்
தெரியும். நான் மேயராக தேர்வு செய்யப்பட்டால், திறமையான நிர்வாகம் மூலம்
மாநகராட்சியை வளர்ச்சியடையச் செய்வேன். நிர்வாகிகளுடன் இன்று ஆலோசித்தபின்,
நாளை மனு தாக்கல் செய்வேன்,'' என்றார். இவரை அறிவித்துள்ளதற்கு, சில
காங்.,நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.