ADDED : அக் 28, 2026 07:12 PM
அ நிறம் | அளவு
மேலுார்: நாவினிபட்டியில் ரூ.30 லட்சத்தில் புதியதாக கட்டிய ஊராட்சி அலுவலகம் ஓராண்டாக பயன்பாடின்றி பூட்டிக் கிடந்தது. அதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடு கட்ட அனுமதி, வரி கட்ட முடியாமல் அவதியுற்றனர். வாடகை கட்டடத்தில் அலுவலகம் தொடர்ந்து செயல்பட்டதால் அரசு பணம் வீணானது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து இன்று (அக்.,28) அமைச்சர் விஸ்வநாதன் ஊராட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். இதனால் அதிகாரிகள், தினமலர் நாளிதழுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
