ADDED : செப் 22, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: விக்கிரமங்கலம் சுற்றுவட்டார விவசாயிகள் பலருக்கு அரசு கொள்முதல் மையத்தில் நெல் விற்பனை செய்ததற்கான ரசீது வழங்கப்பட்டது. இந்நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது தவறான தகவலின் பேரில் விவசாயிகளின் நெல்லை, வியாபாரிகளின் நெல் எனக் கூறி பணத்தை நிறுத்திவிட்டனர்.
இதனால் 2 மாதங்களாக விவசாயிகள் அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரிந்து மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப வழங்கினர். விவசாயிகள் தினமலர் நாளிதழுக்கு நன்றி கூறினர்.
