ADDED : செப் 22, 2026 05:12 PM
அ நிறம் | அளவு
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி அரசியல் அறிவியல் துறை சார்பில் ஜனநாயகத்தில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் ஒருநாள் தேசிய கருத்தரங்கு நடந்தது.
கல்லுாரி முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். மாணவர் பிரபு வரவேற்றார். துறைத் தலைவர் ஆனந்தகுமார் அறிமுக உரையாற்றினார். மதுரை காமராசர் பல்கலை வரலாற்றுத் துறைத் தலைவர் மகாலிங்கம் பேசினார்.
இரண்டாம் அமர்வில் பேராசிரியர் முரளிபிரசாத் அறிமுக உரையாற்றினார். பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லுாரி பேராசிரியர் கஸ்துாரி பேசினார். மூன்றாவது அமர்வில் பேராசிரியர் பொம்மி அறிமுக உரையாற்றினார். அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லுாரி பேராசிரியர் செல்லப்பாண்டியன் பேசினார். மாணவர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
