ADDED : ஜூலை 02, 2025 08:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்; நா.கோயில்பட்டியில் வசிக்கும் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு விநியோகிக்கும் தண்ணீர் பருக உகந்ததாக இல்லை. அதனால் பலர் கிட்னி பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிட்னி பாதிப்பிற்கு தண்ணீரே காரணம் என டாக்டர்கள் கூறியதாக மக்கள் தெரிவித்தனர்
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. உடனே நடவடிக்கை மேற்கொண்ட குடிநீர் திட்ட அதிகாரிகள் மேல்நிலைத் தொட்டியில் காவிரி நீரை ஏற்றி விநியோகித்தனர். பொது மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைத்ததால் தினமலர் நாளிதழுக்கும், காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகளுக்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.