/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
‛தினமலர் செய்தி எதிரொலி: 'அட்மா' ஊழியர்களுக்கு சம்பளம்
/
‛தினமலர் செய்தி எதிரொலி: 'அட்மா' ஊழியர்களுக்கு சம்பளம்
‛தினமலர் செய்தி எதிரொலி: 'அட்மா' ஊழியர்களுக்கு சம்பளம்
‛தினமலர் செய்தி எதிரொலி: 'அட்மா' ஊழியர்களுக்கு சம்பளம்
ADDED : ஜன 18, 2025 05:47 AM
மதுரை : தமிழகத்தில் வேளாண் துறையின் கீழ் செயல்படும் 'அட்மா' தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 13 மாவட்டங்களில் 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என தினமலர் நாளிதழில் செய்தி வெளியான நிலையில் நேற்று அனைவருக்கும் சம்பளம் கிடைத்ததாக பணியாளர்கள் தெரிவித்தனர்.
மாத தொகுப்பூதியமாக பணியாளர்களின் வங்கிக்கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில் கருவூலம் மூலம் சம்பளம் வாங்குவதற்கான பணிகள் தமிழக அளவில் நடைபெற்றது.
இதில் 25 மாவட்டங்களில் சாப்ட்வேரில் விவரங்கள் பதியப்பட்டு அம்மாவட்ட பணியாளர்களுக்கு பொங்கலுக்கு முன்பாக 3 மாத நிலுவை சம்பளம் வழங்கப்பட்டது. மீதி 13 மாவட்டங்களில் உள்ளோர் பொங்கல் பண்டிகைக்குள் சம்பளம் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் வழங்கப்படவில்லை. இதுகுறித்து 'பொங்கலுக்கும் சம்பளம் கிடைக்கலை' என தினமலர் நாளிதழில் ஜன.,15ல் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில் நேற்று மீதி மாவட்டங்களில் உள்ளோருக்கு சம்பளம் கிடைத்துவிட்டதாக பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.