ADDED : பிப் 18, 2024 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: திருவாதவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மக்களை தேடி மருத்துவத்தில் சில மாதங்களாக மாத்திரைகள் வழங்கவில்லை.
அதனால் நோய் தீவிரமானதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று செவிலியர்கள் பரிசோதனை செய்து மாத்திரைகள் வழங்கினர்.