ADDED : அக் 31, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்:  மேலுார் முத்துச்சாமி பட்டியில் ஹைமாஸ் விளக்கு 3 மாதங்களாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. வெளியூர் வேலைக்கு செல்வோர், மாணவர்கள் இரவு நேரத்தில் வீடு திரும்பும் போது வழிப்பறி, விஷப்பூச்சிகள் நடமாட்டத்தால் பாதித்ததால் அச்சத்துடன் சென்று வந்தனர்.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து ஊராட்சி செயலர் சுரேஷ் நடவடிக்கை மேற்கொண்டார். ஹைமாஸ் விளக்கு உடனே பயன்பாட்டுக்கு வந்ததால்  மகிழ்ச்சி அடைந்த மக்கள், தினமலர் நாளிதழுக்கு நன்றி கூறினர்.

