தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தினமலர் செய்திஎம்.எல்.ஏ., ஆய்வு

தினமலர் செய்திஎம்.எல்.ஏ., ஆய்வு

தினமலர் செய்திஎம்.எல்.ஏ., ஆய்வு


ADDED : நவ 05, 2024 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2024 05:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மாநகராட்சி 85வது வார்டில் தெற்குவாசல் முத்துகருப்பபிள்ளை சந்து உள்ளிட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடை உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் ஒருவாரத்திற்கு மேல் துர்நாற்றம் பிரச்னையால் சிக்கி தவித்தனர். இததொடர்பாக தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக அந்த வார்டுக்கு உட்பட்ட தெற்கு சட்டசபை தொகுதி ம.தி.மு.க., எம்.எல்.ஏ., பூமிநாதன் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். கவுன்சிலர் முத்துமாரி (அ.தி.மு.க.,) உதவி பொறியாளர் மணியன் முன்னிலையில் மாநகராட்சி அலுவலர்கள் அப்பகுதியில் தேங்கிய கழிவுநீரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். தனது கவனத்திற்கு கொண்டு வந்த தினமலர் நாளிதழுக்கு பூமிநாதன் நன்றி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us