ADDED : செப் 25, 2026 06:11 PM
அ நிறம் | அளவு
மேலுார், செப். 26 -
மேலுார் பகுதியில் குறிப்பாக அரசு மருத்துவமனைக்குள் குரங்குகள் கூட்டமாக நுழைந்து நோயாளிகள் வைத்திருக்கும் உணவு பொருட்கள் மற்றும் உறவினர்கள் கொண்டுவரும் பொருட்களை பறித்தனவ.
தடுப்போரை ‘உர்ர்’ எனும் சத்துத்துடன் விரட்டி கடித்ததால் நோயாளிகள் அச்சத்துடனே சிகிச்சை பெற்றனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து வனத்துறையினர் கூண்டு வைத்து வானரங்களை (குரங்குகளை) பிடித்து பெருமாள் மலையில் உள்ள வனப்பகுதியில் கொண்டு விடுவித்தனர். இதனால் நோயாளிகள் தினமலர் நாளிதழ் மற்றும் வனத்துறைக்கு நன்றி தெரிவித்தனர்.
