ADDED : செப் 25, 2026 06:11 PM
கோயில்
* கும்பாபிஷேக மண்டல கால பூஜை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:35 மணி.
* புரட்டாசி சனி : பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, பெருமாள், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 8:00 மணி.
* புரட்டாசி பவுர்ணமி: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, தாயார் பால்குட உற்ஸவம், ஸ்ரீதேவி, பூதேவி, மதுரவல்லித் தாயார், ஆண்டாள் சமேத வியூக சுந்தரராஜ பெருமாள் திருமஞ்சனம், காலை 10:00 மணி, ஐந்து கருட சேவை, மாசி வீதிகளில் வீதியுலா, மாலை 6:30 மணி.
* புரட்டாசி சனி சிறப்பு அபிஷேகம்: ஆஞ்சநேயர் கோயில், பெருமாள் கோயில் தென்மாட வீதி, மதுரை, காலை 7:45 மணி, கூடலழகர் பெருமாள் கோயில் சன்னதி தெரு சுந்தரராஜ் பாகவதர் சத்திரத்தில் அன்னதானம், மதியம் 12:00 மணி.
* புரட்டாசி சனி சிறப்பு அபிஷேகம்: மங்கல ஆஞ்சநேயர் கோயில், நேதாஜி ரோடு, மதுரை, காலை 8:00 மணி.
* புரட்டாசி பொங்கல் விழா: மகேஸ்வரி அம்மன் கோயில், மறைமலை அடிகள் தெரு, சதாசிவ நகர், மதுரை, முளைப்பாரிக்கு மகளிர் குழு கும்மி அடித்தல், மாலை 6:30 மணி.
* பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை: விவேகானந்த முனீஸ்வரர் கோயில், அன்புவீதி, பாண்டியராஜபுரம் மேட்டுத் தெரு, பெத்தானியாபுரம், மதுரை, மாலை 5:30 மணி, பவுர்ணமி பூஜை, இரவு 7:15 மணி.
* வருஷாபிஷேகம்: குரு சங்கர நாராயண சுவாமிகள் ஜீவசமாதி, நாராயணபுரம், மதுரை, காசி விஸ்வநாதர், குரு சங்கர நாராயண சுவாமிக்கு கலச பூஜை, சிறப்பு அபிஷேகம், காலை 7:00 மணி, அன்னதானம், மதியம் 12:00 மணி.
பக்தி சொற்பொழிவு
* ஆழ்வார்கள் காட்டும் வழி – புரட்டாசி சிறப்பு உபன்யாசம்: நிகழ்த்துபவர் – வேளுக்குடி ரங்கநாதன் சுவாமி, பிராமண கல்யாண மஹால், பழைய தபால் நிலைய ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 6:30 மணி.
* தாயுமானவர்: நிகழ்த்துபவர் – சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* பகவத்கீதை: நிகழ்த்துபவர் – சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் – சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் ‘சத்தர்ஸனம்’ விளக்கவுரை, காலை 9:15 மணி.
* புரட்டாசி சனி சிறப்பு பூஜை, நாமசங்கீர்த்தனம்: நிகழ்த்துபவர் – ஆய்க்குடி குமார் குழுவினர், மஹா பெரியவர் கோயில், வ.உ.சி., தெரு, ஆனையூர் மெயின் ரோடு, கூடல்நகர், மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:00 மணி.
* புரட்டாசி சனி அகண்ட மஹாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 6:00 மணி.
பள்ளி, கல்லுாரி
* அரசு சட்டக்கல்லுாரி பட்டமளிப்பு விழா: தமுக்கம் மைதானம், மதுரை, தலைமை: அமைச்சர் நிர்மல் குமார், பட்டமளிப்புரை: உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, சிறப்புரை: உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரவணன், முருகேசன், முன்னாள் நீதிபதி பாரதிதாசன், சட்டக்கல்வி இயக்குநர் கவுரி ரமேஷ், வழக்கறிஞர் ஓம் பிரகாஷ், காலை 10:00 மணி.
என்.எஸ்.எஸ்., முகாம் – தொடக்கவிழா
* சி.எஸ்.ஐ., தொடக்கப்பள்ளி, கீழமாத்துார், மதுரை, தலைமை: மதுரைக் கல்லுாரி வாரியப் பள்ளிகள் தலைவர் சங்கரன், சிறப்பு விருந்தினர்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தயாளன், ஏற்பாடு: மதுரைக் கல்லுாரி மேல்நிலைப்பள்ளி, காலை 11:00 மணி.
* பொதும்பு கிராமம், மதுரை, தலைமை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன், கல்வி அலுவலர் கணேசன், ஏற்பாடு: துாய மரியன்னை மேல்நிலைப்பள்ளி, காலை 10:00 மணி.
* பா.புதுப்பட்டி கிராமம், மதுரை, தலைமை: முதன்மை கல்வி அலுவலர் தயாளன், சிறப்புரை: தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் பிரசாத், ஏற்பாடு: கருமாத்துார் புனித கிளாரட் மேல்நிலைப்பள்ளி, மாலை 6:00 மணி.
* உச்சப்பட்டி கிராமம், மதுரை, தலைமை: தியாகராஜர் ஆலை நிர்வாக இயக்குநர் தியாகராஜன், சிறப்புரை: முதன்மை கல்வி அலுவலர் தயாளன், ஏற்பாடு: தியாகராஜர் ஆலை மேல்நிலைப்பள்ளி, காலை 9:00 மணி.
* கோயில்பாப்பாக்குடி கிராமம், மதுரை, தலைமை: முதன்மை கல்வி அலுவலர் தயாளன், சிறப்புரை: கோயில்பாப்பாக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணவேணி, ஊராட்சி செயலர் ராஜேஷ் கண்ணன், குழந்தைகள் பாதுகாப்புக் குழு முன்னாள் உறுப்பினர் பாண்டியராஜா, ஏற்பாடு: கூடல்நகர் புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மதியம் 3:00 மணி.
பொது
* ஸ்டேட் வங்கி ஓய்வூதியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, தலைமை: மண்டல தலைவர் உதயசங்கர், சிறப்பு விருந்தினர்: பொதுச் செயலாளர் ஸ்ரீதரன், இணை பொதுச் செயலாளர் சந்திரசேகரன், வங்கி உதவிப் பொது மேலாளர் சேஷாச்சலம், ஏற்பாடு: சென்னை மண்டலம், மதியம் 3:00 மணி.
* தெலுங்கு பிராமண மஹாசபை பொதுக்குழு கூட்டம்: அபிநவ வித்யாதீர்த்த மண்டபம், சிருங்கேரி நகர், பைபாஸ் ரோடு, மதுரை, ஒருங்கிணைப்பு: பொதுச் செயலாளர் பத்மா, காலை 10:30 மணி.
* வைகை கரையில் பவுர்ணமி தீபாராதனை: பேச்சியம்மன் படித்துறை, மதுரை, ஏற்பாடு: வைகை நதி மக்கள் இயக்கம், மாலை 5:30 மணி.
* ‘மகாத்மா காந்தியின் தொகுப்பு நுால்கள் – பகுதி 24’ நுால் மதிப்புரை: காந்தி மியூசியம், மதுரை, மதிப்புரை வழங்குபவர்: மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், மாலை 5:00 மணி.
* நீதிமன்ற வளாகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் துாய்மைப் பணி தொடக்க விழா: மகாத்மா காந்தி சிலை அருகே, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மதுரை, துவக்கி வைப்பவர்: உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நிர்வாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன், காலை 8:00 மணி.
* தன்னார்வலர்கள் மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி: தென்பரங்குன்றம் குகைக் கோயில் பகுதிகள், திருப்பரங்குன்றம், ஒருங்கிணைப்பு: செந்தில், ஏற்பாடு: ஸ்ரீபூ கலாசார மையம், காலை 7:00 முதல் 8:00 மணி வரை.
விளையாட்டு
* முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, அரசு ஊழியர்களுக்கான (பெண்கள்) இறகுபந்து போட்டி, ஏற்பாடு: மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 6:30 மணி.
* அண்ணா பல்கலை 16வது குறுவட்ட பெண்களுக்கான கையுந்து பந்து போட்டி: அல்ட்ரா பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி, மதுரை, காலை 8:30 மணி.
மருத்துவம்
* இலவச நுரையீரல் மருத்துவ முகாம்: வடமலையான் மருத்துவமனை, தெற்கு வாசல், மதுரை, மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை.
கண்காட்சி
* தீபாவளி எக்ஸ்போ: எம்.பி.மகால், கருப்பாயூரணி, மதுரை, ஏற்பாடு: காஞ்சிபுரம் சில்க் மந்திர், காலை 10:00 முதல் இரவு 7:30 மணி வரை.
* கேரளா பர்னிச்சரின் சோபாக்கள், பெட்ரூம் செட் உள்ளிட்ட பர்னிச்சர் விற்பனை, கண்காட்சி: அண்ணாமலை கிராண்ட் பிருந்தாவனம் மஹால், விரகனுார் ரிங் ரோடு, மதுரை, ஏற்பாடு: ஆல்பா பர்னிச்சர், காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.
* ஹஸ்டகலா வீட்டு அலங்கார பொருட்கள், ஜூவல்லரி, ஆடைகள் கண்காட்சி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: மான்யா ஆர்ட் அண்ட் கிராப்ட், காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை.
