/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தினமலர் செய்தி: பேவர் பிளாக் பதிப்பு
/
தினமலர் செய்தி: பேவர் பிளாக் பதிப்பு
ADDED : டிச 09, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்,: ஏ.சுந்தரராஜபுரத்தில் அங்கன்வாடி மைய நுழைவு வாயில் பள்ளமாக காணப்பட்டதால் மழை மற்றும் கழிவு நீர் தேங்கியது. மாணவர்கள் மையத்திற்குள் கழிவு தண்ணீரை கடந்து செல்வதால் பலவிதமான தொற்று நோய்களுக்கு ஆளாகினர்.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து ஊராட்சி செயலர் பிரபு தலைமையில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டன. மாணவர்கள் மற்றும் பெற்றோர் தினமலர் இதழுக்கு நன்றி தெரிவித்தனர்.