/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தினமலர் செய்தி: கிடைத்தது தீர்வு
/
தினமலர் செய்தி: கிடைத்தது தீர்வு
ADDED : ஜன 12, 2026 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தானில் தி.மு.க., நிர்வாகிகள் வீட்டில் வைத்து பொங்கல் பரிசு டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதி அ.தி.மு.க.,வினர் 'தேர்தலுக்காக திட்டமிட்டு இவ்வாறு செய்கின்றனர்' எனவாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது.
கூட்டுறவுத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ரேஷன் கடை பணியாளர்களை மக்களின் வீடுகளுக்கே சென்று டோக்கன்களை வழங்க செய்தனர். மேலும் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு முறையாக வழங்குவதை உறுதி செய்தனர். பொதுமக்கள் அதிகாரிகள், தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

