/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தினமலர் ஷாப்பிங் கொண்டாட்டம் இன்றும் நாளையும் தான்: வாருங்கள் மக்களே
/
தினமலர் ஷாப்பிங் கொண்டாட்டம் இன்றும் நாளையும் தான்: வாருங்கள் மக்களே
தினமலர் ஷாப்பிங் கொண்டாட்டம் இன்றும் நாளையும் தான்: வாருங்கள் மக்களே
தினமலர் ஷாப்பிங் கொண்டாட்டம் இன்றும் நாளையும் தான்: வாருங்கள் மக்களே
UPDATED : ஆக 31, 2025 07:35 AM
ADDED : ஆக 31, 2025 07:26 AM

மதுரை: மதுரை தமுக்கத்தில் துவங்கிய தினமலர், சத்யா இணைந்து வழங்கும் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2025 வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி மற்றும் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர்ஸ், பில்டிங் அன்ட் ஆட்டோ மொபைல் எக்ஸ்போ இன்றும், நாளையும் மட்டுமே.
தினமலர் ஷாப்பிங் திருவிழாவை கொண்டாட இன்றே கிளம்புங்க மக்களே. கண்காட்சியின் இரண்டாம் நாளான நேற்று குட்டீஸ்களுடன் குடும்பம் குடும்பமாக வந்திருந்த மக்கள் காலை முதலே குவிய துவங்கினர். புதுப்படம் ரிலீஸ் முதல்நாள் காட்சிக்கு செல்லும் ஆர்வம் போல் ஸ்டால்களை திறப்பதற்கு முன்பே காத்திருந்த மக்கள் உற்சாகத்துடன் நுழைந்தனர். ஸ்டால்களில் கடல்போல் குவிக்கப்பட்டிருந்த பொருட்களில் இதை வாங்குவதா, அதை வாங்குவதா என குழப்பத்திலும், மகிழ்ச்சியிலும் குஷியாகி விருப்பம் போல் பொருட்களை தேர்வு செய்தனர்.
![]() |
அலைமோதிய இளம் பெண்கள் குடும்பத்துடன் வந்திருந்த இளம் பெண்கள் சத்யா ஸ்டாலில் குவிக்கப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை பார்த்து வியப்பில் ஆழ்ந்தனர். அடுத்தடுத்து ஸ்டால்களில் கூட்டம் ஆர்ப்பரித்தது. நுாற்றுக்கணக்கான ஸ்டால்களை ஒன்று விடாமல் பார்வையிட்டு தேடி தேடி பொருட்களை வாங்கிய பின் மக்கள் குடும்பத்துடன் புட்கோர்ட் பக்கம் சென்றனர். அங்கு மட்டன், சிக்கன் பிரியாணி, புல்லட் சிக்கன், மட்டன் கோலா, பீட்சா, பர்கர், பொட்டட்டோ பிரை, பனியாரம், கரும்பு ஜூஸ் என போட்டி போட்டு வாங்கி ருசித்தனர். அங்கு இசைக்கப்படும் இசையை கேட்டு ரசித்துக்கொண்டே உணவு வகைகளை ருசித்தனர். வீட்டிற்கு வாங்கி சென்றனர்.
![]() |
குஷியாய் கொண்டாட்டமாய் குழந்தைகளை குதுாகலிக்க வைத்தது போத்தீஸ் கேம் ேஸான். அங்கிருந்த ஷார்க் கேம், பிக் டிரையின் மினி டிரையின், வாட்டர் ரோலர், எலக்ட்ரானிக் பைக், கார், வாட்டர் போட், ஒட்டக சவாரி, புல்லட் ரைடு என கேம்ஸில் பங்கேற்று குஷியாகினர்.
இந்தாண்டு அமைக்கப்பட்டுள்ள ஜூராசிக் பார்க் குழந்தைகளை மிரள வைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. குழந்தைகளுக்கு கலர் கலர் பலுான்கள் இலவசமாக வழங்கப்பட்டன. கார், டூவீலர்கள் பார்க்கிங் வசதி உள்ளது.
இணைந்து கரம் சேர்ப்போர்: பவர்டு பை ஜி ஸ்கொயர். அசோசியேட் ஸ்பான்சர் ஆனந்தா அன்ட் ஆனந்தா, முத்து மெட்டல், கோ ஸ்பான்சர் பிராங் பேபர், ஆல்பா பர்னிச்சர்ஸ், சலானி ஜூவல்லரிஸ், கோவை லட்சுமி, ரேடியோ பார்ட்னர் மிர்ச்சி, ஆடியோ ஸ்பான்சர் இன்போ பஸ்.