/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அக்.2 மதுரையில் தினமலர் நடத்தும் 'அ'னா, 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம் இன்றே முன்பதிவு செய்யுங்கள்

ADDED : செப் 16, 2025 04:38 AM
மதுரை: மதுரையில் தினமலர் மாணவர் பதிப்பு, மஹன்யாஸ் இணைந்து நடத்தும் இரண்டரை முதல் மூன்றரை வயது குழந்தைகளுக்கான 'அ'னா, 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி, மதுரையில் இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் (சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்கு உட்பட்டது) அக்.,2ல் காலை 8:50 முதல் 12:00 மணி வரை நடக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் தினமலர் சார்பில் விஜயதசமித் திருநாள், வித்யாரம்பத்துக்கு உகந்த நாளில் இளந்தளிர்களின் பிஞ்சு விரல் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பிக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பள்ளி வகுப்பறைக்குள் செல்வதற்கு முன் கல்விக் கோயிலுக்குள் செல்லும் இந்நிகழ்ச்சியில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் ஆர்வமாக பங்கேற்பர்.
இந்தாண்டும் அக்.,2ல் நடக்கவுள்ள இந்நிகழ்ச்சியில் இரண்டரை முதல் மூன்றரை வயதுள்ள குழந்தைகள் பங்கேற்க இன்று முதலே முன்பதிவு செய்யலாம். குழந்தை பெயர், பெற்றோர் பெயர், முழு முகவரி, அலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட்டு 90920 60863 என்ற அலைபேசி எண்ணில் காலை 10:00 முதல் மாலை 6:00 மணிக்குள் பெற்றோர் முன்பதிவு செய்யலாம். அனுமதி இலவசம்.
இந்நிகழ்ச்சிக்கு பவர்டு பை ஸ்பான்சர் அம்மன் உயர்தர சைவ உணவகம். கோ ஸ்பான்சர்: ஆனந்தா அண்ட் ஆனந்தா, கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ., பள்ளி, மதுரை ஸ்ரீநர்சீங் ஸ்வீட்ஸ் லிமிடெட், பி.ஜி., நாயுடு ஸ்வீட்ஸ்.