/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தினமலர் நடத்திய மெகா கோலப்போட்டியில் புள்ளிக்கோலம், புதிர்கோலம், பூக்கோலம், விழிப்புணர்வு கோலங்கள்;
/
தினமலர் நடத்திய மெகா கோலப்போட்டியில் புள்ளிக்கோலம், புதிர்கோலம், பூக்கோலம், விழிப்புணர்வு கோலங்கள்;
தினமலர் நடத்திய மெகா கோலப்போட்டியில் புள்ளிக்கோலம், புதிர்கோலம், பூக்கோலம், விழிப்புணர்வு கோலங்கள்;
தினமலர் நடத்திய மெகா கோலப்போட்டியில் புள்ளிக்கோலம், புதிர்கோலம், பூக்கோலம், விழிப்புணர்வு கோலங்கள்;
UPDATED : ஜன 08, 2024 06:30 AM
ADDED : ஜன 08, 2024 05:28 AM

மதுரை : தினமலர், போத்தீஸ், ஸ்ரீஜெயபிரபா ஜூவல்லர்ஸ் சார்பில் மதுரை அரசரடி யு.சி.பள்ளி மைதானத்தில் நேற்று நடந்த மெகா கோலப்போட்டியில் பங்கேற்ற பெண்கள், கோலத்தின் பல்வேறு பரிமாணங்களை வண்ணங்களில் வரைந்து பிரமிக்க வைத்தனர்.
![]() |
புள்ளிக்கோலம் துவங்கி பூக்கோலம், பக்தி கோலம், உடலுறுப்பு தானம், தண்ணீர், குழந்தைகள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கோலங்கள், கட்டங்கள், வட்டங்களைக் கொண்டு உருவாக்கிய 3 டி கோலங்கள் என கோலத்தில் ஆராய்ச்சி நடத்தும் அளவிற்கு எண்ணிலடங்கா வண்ணக் கோலங்களை வரைந்து வாய்பிளக்கச் செய்தனர்.
![]() |
முதல்பரிசு எல்.இ.டி., 2ம் பரிசு வாஷிங் மெஷின், 3ம் பரிசு கிரைண்டர், 4, 5 ம் பரிசாக மிக்சி, 50 பேருக்கு ஆறுதல் பரிசாக குக்கர் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
![]() |
வெற்றி பெற்றவர்களுக்கு மேயர் இந்திராணி பொன்வசந்த் பரிசு வழங்கினார். மாநகராட்சி மண்டலம் 3 (மத்தி) தலைவர் பாண்டிச்செல்வி, கவுன்சிலர் மகாலட்சுமி, ஸ்ரீஜெயபிரபா ஜூவல்லர்ஸ் இயக்குநர் தனசேகர், ஆனந்தா அன்ட் ஆனந்தா இயக்குநர் சுந்தர், மனோ புக் சென்டர் இயக்குநர் சதீஷ்குமார், ஸ்ரீமீனாட்சி பேன் ஹவுஸ் செயல் இயக்குநர்கள் கோகுல், மனோஜ் கலந்து கொண்டனர்.
![]() |
![]() |
நிகழ்ச்சியை மதுரை பாண்டியன் அப்பளம், மனோ புக் சென்டர், எஸ்.வி.எஸ்., அக்மார்க் கடலைமாவு, ஸ்ரீ மீனாட்சி பேன் ஹவுஸ், ஆனந்தா அன்ட் ஆனந்தா, மில்கா வொண்டர் கேக் இணைந்து வழங்கின.
//
போட்டியில் பரிசு பெற்றவர்கள் கூறியதாவது:
* வீரமங்கையின் மகள்
தீபிகா, தெப்பக்குளம்:
குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கக்கூடாது என்பதை கூறும் வகையில் வீரமங்கை வேலுநாச்சியார் கையில் குழந்தை இருப்பது போல கோலம் வரைந்தேன். முதல்பரிசாக எல்.இ.டி., டிவி கிடைத்தது. பரிசு கிடைத்ததே விழிப்புணர்வு பெற்றதைப் போலிருக்கிறது.
//
* நீரின்றி அமையாது உலகு
கற்பகம், வில்லாபுரம்:
பிற்கால சந்ததியருக்கு தண்ணீரைத் தரவேண்டும் என்ற விழிப்புணர்வு கூட இல்லாமல் இஷ்டம் போல நிலத்தடி நீரை உறிஞ்சிக் கொண்டிருக்கிறோம். ஒரு சொட்டு தண்ணீருக்கு நாளைய சமுதாயம் கையேந்தி நிற்கக்கூடாது என்பதை விளக்கும் கோலம் வரைந்தேன். 2ம் பரிசாக வாஷிங் மெஷின் கிடைத்தது சந்தோஷம்.
//
* தாய்மையின் பெருமை
சிந்துஜா, மாடக்குளம்:
நான் கர்ப்பம் தரித்திருப்பதால், தாய்மையின் பெருமையை கோலமாக வரைந்தேன். நிறை வயிற்றுடன் குனிந்து நிமிர்ந்து கோலமிடுவது கஷ்டமாகத்தான் இருந்தது. ‛தினமலர்' கோலப்போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற பெருமைக்காகவே வந்தேன். 3ம் பரிசாக கிரைண்டர் கிடைத்தது.