ADDED : மே 21, 2025 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு உட்பட்ட கூத்தியார்குண்டு, கருவேலம்பட்டி, மொச்சிகுளம் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் கோடை நெல் விதைப்பை துவங்கினர்.
கூத்தியார்குண்டு உழவர் உற்பத்தியாளர் குழுத் தலைவர் செல்வம், செயலாளர் வடிவேலன், பொருளாளர் குருமூர்த்தி கூறியதாவது:
நேரடி விதைப்பால் செலவுகள் குறைவு. உரச்செலவு, களையெடுப்பு கூலி குறைவு. தண்ணீர் தேவை குறைவு. குறைந்த நாட்களில் அறுவடை செய்ய முடியும். விவசாய பணிகளுக்கு வேலைக்கு ஆட்கள் கிடைப்பது இல்லை. 40 வயதிற்கு மேற்பட்டோர் மட்டுமே விவசாய வேலைக்கு வருகின்றனர். ஆண்டுக்காண்டு கூலி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதனால் நேரடி விதைப்பு பணியை துவக்கி உள்ளோம் என்றனர்.