தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/திறன்சார் பாடத்திட்டத்தை உருவாக்க அனைத்து பல்கலைகளுக்கும் உத்தரவு

திறன்சார் பாடத்திட்டத்தை உருவாக்க அனைத்து பல்கலைகளுக்கும் உத்தரவு

திறன்சார் பாடத்திட்டத்தை உருவாக்க அனைத்து பல்கலைகளுக்கும் உத்தரவு


UPDATED : நவ 24, 2026 07:08 PM

ADDED : நவ 24, 2026 07:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 07:08 PM ADDED : நவ 24, 2026 07:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

– நமது நிருபர் –

திறன்சார் பாடத்திட்டங்களை உருவாக்க பல்கலை பாடத்திட்ட குழுக்கள், துறைத் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்லுாரி மாணவர், இளைஞர்கள் திறனை மேம்படுத்தி, வேலை வாய்ப்புகளை உருவாக்க 'நான் முதல்வன்' திட்டம் நடைமுறையில் இருந்தது. தற்போது அதில் சில மாற்றங்களுடன் உயர்கல்வித்துறையில் 'ஒரு பட்டம், 6 திறன்கள்' என்ற திட்டம் அமலில் உள்ளது.

இதன் மூலம் அரசு கல்லுாரிகளில் மாணவர்கள் தங்கள் வழக்கமான டிகிரியுடன் ஒவ்வொரு செமஸ்டரிலும் வேலைவாய்ப்புக்கான ஒருவகை திறன் பாடங்களை கூடுதலாக கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது 181 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் 1.30 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வரும் செமஸ்டர் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மாநில உயர்கல்வி மன்றத்துடன் இணைந்து உயர்கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் சென்னையில் துறை செயலாளர் தீரஜ்குமார் தலைமையில் நடந்த அனைத்து பல்கலை பதிவாளர்கள் ஆய்வுக் கூட்டத்தில் 'ஒரு பட்டம், 6 திறன்கள்' குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து பதிவாளர்கள் கூறுகையில், ஆறு செமஸ்டர் கொண்ட பட்டப்படிப்பில், முதன்மை பாடத்துடன் தொடர்புடைய 6 திறன்சார் பாடங்கள், முதுகலை பட்டப்படிப்புக்கு 4 திறன்சார் பாடங்களையும் வடிவமைக்க பல்கலை பாடத் திட்டக் குழு, துறை பேராசிரியர்களுக்கு கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது. அரசு கல்லுாரிகள் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்.ஓ.யு.,) மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us