/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்
/
சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்
சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்
சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்
ADDED : ஆக 03, 2025 05:15 AM
மதுரை : மதுரையில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் மாவட்ட கூட்டம் பொதுச் செயலாளர் பாலமுருகன் தலைமையில் நடந்தது. துணைமேயர் நாகராஜன், அகில இந்திய செயல் தலைவர் நம்புராஜன், மாநில பொருளாளர் சக்ரவர்த்தி, கவுன்சிலர் குமரவேல் பங்கேற்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திரா காந்தி ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசின் பங்கு ரூ.300ஐ, ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும். சுங்கச்சாவடிகளில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் நிபந்தனையற்ற விலக்கு அளிக்க வேண்டும். அரசு, தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசு தேர்வுகளில் (ஸ்கிரைப்) விண்ணப்பிக்கும்போது புதிதாக சான்று கேட்பதால் அலைக்கழிப்புக்கு ஆளாக்கப்படுகின்றனர். தேவையான சான்றிதழ்களை முந்தைய தேர்வின்போது அளித்ததில் இருந்து பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.