/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஏமாற்றங்களை கொடுத்த தி.மு.க., ஆட்சி வேலுார் இப்ராஹிம் விளாசல்
/
ஏமாற்றங்களை கொடுத்த தி.மு.க., ஆட்சி வேலுார் இப்ராஹிம் விளாசல்
ஏமாற்றங்களை கொடுத்த தி.மு.க., ஆட்சி வேலுார் இப்ராஹிம் விளாசல்
ஏமாற்றங்களை கொடுத்த தி.மு.க., ஆட்சி வேலுார் இப்ராஹிம் விளாசல்
ADDED : மார் 21, 2024 02:32 AM

உசிலம்பட்டி: தேனி லோக்சபா தொகுதியில் உள்ள உசிலம்பட்டி சட்டசபை தொகுதியில் பா.ஜ., கட்சி அலுவலக திறப்பு விழா நடந்தது.
இதில் பா.ஜ., தேசிய சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் பங்கேற்றார். அவர் கூறியதாவது:
ஊழல் கரை படிந்துள்ள தி.மு.க., ஆட்சியில் இன்று போதைப்பொருள் தாண்டவமாடுகிறது. சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. ஏமாற்றங்களை கொடுத்த அந்த ஆட்சியை அகற்றுவோம்.
மெகா கூட்டணி அமைப்போம் எனக் கூறி அனாதை கூட்டணியாக உள்ள பழனிச்சாமியை அ.தி.மு.க., வினரே புறக்கணிப்பர். ஜெயலலிதா குடும்ப ஆட்சியை முடிவு கட்டுவோம் எனக் கூறியுள்ளார். இன்று தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் வாரிசுகளுக்கு 'சீட்' கொடுத்துள்ளனர்.
குடும்ப ஆட்சியை பா.ஜ., எதிர்க்கிறது. தி.மு.க., வின் தேர்தல் அறிக்கை குப்பையில் போடுவதற்கு உரியது. மதுவிலக்கு கொண்டு வருவோம் என்றவர்கள், கொண்டு வந்தனரா.
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 உரிமைத் தொகை என அறிவித்து விட்டு தகுதியுள்ள பெண்களுக்கு மட்டும் என்றனர். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 குறைப்போம் என்றவர்கள் குறைத்தனரா. மகளிர் தினத்தை முன்னிட்டு மோடி அரசு ரூ.100 குறைத்துள்ளது.
உதயநிதி 5 பவுன் நகை வங்கி கடனில் இருந்தால் தள்ளுபடி செய்வோம் என்றார். தள்ளுபடி செய்தனரா. பொய்யான வாக்குறுதிகள் கொடுக்கின்றனர். அவை குப்பைக் கூடைக்குத்தான் போகும். தி.மு.க., மீண்டும் அல்வா கொடுப்பதைக் கண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள், என்றார்.

