ADDED : ஆக 08, 2025 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: ''தமிழரின் பெருமைகளை முதலில் தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் சொல்ல வேண்டும். அதன்பிறகே வெளிநாடுகளுக்கு சொல்ல வேண்டும்'' என துபாய் தமிழ்ச்சங்கத் தலைவர் ஜெயந்திமாலா சுரேஷ் மதுரையில் தெரிவித்தார்.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நடந்த கலந்துரையாடல் நிகழ்வில் சங்கத்தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார்.
ஜெயந்திமாலா பேசுகையில், ''விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது வெகு சிலரே சேர்ந்து பாடுகின்றனர். மற்றவர்கள் அதைப் பற்றி கண்டு கொள்வதில்லை. உங்களின் தமிழ்ப்பற்று இதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். நம்மைச்சுற்றி அன்பானவர்கள் இருந்தால் தான் சேவை செய்வது கூட எளிதாக இருக்கும்'' என்றார்.