ADDED : மார் 20, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : சுற்றுலாத்துறை சார்பில் மதுரை வந்த வியட்நாம் சுற்றுலா ஏற்பாட்டாளர் குழுவினருடன் மாவட்ட சுற்றுலா தொழில் முனைவோர்களின் கலந்துரையாடல் நிகழ்வு நடந்தது.
தென் தமிழக சுற்றுலா இயக்குபவர்கள், ஏஜென்டுகள், போக்குவரத்து ஆப்பரேட்டர்கள், மதுரை டிராவல்ஸ் கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சுற்றுலா அலுவலர் ஸ்ரீ பாலமுருகன், சுற்றுலா வளர்ச்சிக்கழக மண்டல மேலாளர் டேவிட் ஏற்பாடுகளை செய்தனர். கிராமிய நடன நிகழ்ச்சியுடன் பாரம்பரிய உணவு வழங்கப்பட்டது. பின்னர் மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகாலை வியட்நாம் குழுவினர் வியந்து பார்த்தனர்.

