ADDED : ஆக 19, 2025 01:11 AM
பேரையூர்; பேரையூர் பகுதியில் நுாற்றுக் கணக்கான ஏக்கர் எலுமிச்சையில் நுனி கருகல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
டி. கல்லுப்பட்டி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ராஜசேகர் கூறியதாவது: நுனி கருகல் நோய் பாதித்த செடிகள் வளர்ச்சி குன்றி காணப்படும்.
நோய் பாதித்த செடிகளின் கிளைகள் கீழ் நோக்கி காய்ந்து வரும். காய், பிஞ்சுகள் உதிர்ந்து விடும்.
இதனை தடுக்க பாதிப்புள்ள கிளைகளை அகற்ற வேண்டும். கிளைகளை வெட்டிய இடத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில் 3 கிராம் அளவில் காப்பர் ஆக்ஸி குளோரைடு கலந்து தடவ வேண்டும். மரம் ஒன்றுருக்கு 15 முதல் 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் 100 கிராம் டிரைகோடெர்மா கலந்து பாதித்த மரங்களின் துார்பகுதியில் இடவேண்டும். மாதம் ஒரு முறை காப்பர் ஆக்ஸி குளோரைடு என்ற பூஞ்சான கொல்லியை 10 லிட்டர் தண்ணீருக்கு 25 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும் என்றார்.