/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மின்சாரம் தாக்கி பலி இழப்பீடு வழக்கு தள்ளுபடி
/
மின்சாரம் தாக்கி பலி இழப்பீடு வழக்கு தள்ளுபடி
ADDED : டிச 24, 2024 04:57 AM
மதுரை: மதுரை சரஸ்வதி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: எனது கணவர் அவரது பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். பலத்த மழை பெய்து முகம் கழுவச் சென்றார்.
அவரது நிலத்தைச் சுற்றிலும் போடப்பட்டிருந்த இரும்பு கம்பி வேலியைத் தொட்டார். வேலியில் மின்கசிவு ஏற்பட்டது. மின்சாரம் தாக்கி கணவர் இறந்தார். போலீசார் வழக்கு பதிந்தனர். பின் அது முடித்து வைக்கப்பட்டது.
ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி மதுரை மின்வாரிய தலைமைப் பொறியாளர், சமயநல்லுார் உதவி செயற்பொறியாளருக்கு மனு அனுப்பினேன். இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி ஜி.கே.இளந்திரையன்: இதில் மின்வாரியத்தின் கவனக்குறைவு எதுவும் இல்லை. தகுதி அடிப்படையில் மனு ஏற்புடையதல்ல; தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.