ADDED : செப் 28, 2026 06:54 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: தென்கரை ஊராட்சி மலைப்பட்டியில் காட்சிப் பொருளான குடிநீர் தொட்டியை சீரமைத்து தண்ணீர் வழங்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இங்கு பழைய அங்கன்வாடி அருகே 2 ஆண்டுகளுக்கு முன் குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இதனருகே போர்வெல் அமைத்து 2 ஆண்டுகளாக இணைப்பு வழங்கவில்லை. மேலும் அமைத்த போர்வெல் கற்களால் மூடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியினர் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
அப்பகுதி கோபி கூறியதாவது: தொட்டி கட்டி 2 ஆண்டுகளாகி விட்டது. போர்வெல் அமைத்து இணைப்பு வழங்காததால் தொட்டி காட்சிப் பொருளாகவே உள்ளது. இங்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் அவசர தேவைக்காக இத்தொட்டி அமைக்கப்பட்டது. தற்போது வெயில், மழையில் காய்ந்து சேதமடைகிறது. ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
