ADDED : செப் 28, 2026 06:54 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் சேடப்பட்டி ராமநாதபுரம் கிராமத்தில் பயறுவகை பயிர்களில் செயல் விளக்கத் திட்டம் நடந்தது.
விதை அமிர்தம் கொண்டு விதை நேர்த்தி செய்வது, உளுந்து, துவரை, பாசிப்பயறு விதைகளில் அதிக மகசூலை பெற டி.என்.ஏ.யு. பயறு ஒண்டர் தெளிப்பு முறை குறித்து இணைப்பேராசிரியர் ஆனந்த் பேசினார். பயறு வகைகளில் பூச்சி, நோய் தாக்குதல், கட்டுப்படுத்தும் முறை குறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் விளக்கினார். விவசாயிகளுக்கு தட்டைப்பயறு, உளுந்து விதை, விதை அமிர்தம், பயறு ஒண்டர் இலவசமாக வழங்கப்பட்டது. தொழில்நுட்ப உதவியாளர்கள் மூவேந்திரன், மாரிமுத்து முகாமை ஒருங்கிணைத்தனர்.
