ADDED : டிச 05, 2024 06:11 AM

மதுரை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டி மதுரை ஜெயராஜ் நாடார் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 20 பதக்கங்களை வென்றனர்.
14 வயது பிரிவில் கீர்த்தனா, கோகிலா, ஜானுஷிகா, 17 வயது பிரிவில் பிரியாமணி, சுஸ்மிதா, வன்சிகா, பவதாரணி, 19 வயது பிரிவில் அக்ஷயா ஸ்ரீ ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.
14 வயது பிரிவில் ஹாசினி, 17 வயதில் ஜெயஸ்ரீ, ராகவி, 19 வயதில் பிரியதர்ஷினி, அனிதா, திவ்யதர்ஷினி, வெங்கல மாசான தேவி வெள்ளிப்பதக்கம் வென்றனர். 14 வயதில் மிர்திவிகா, திகாசினி, தான்யா, 17 வயதில் சாந்தினி, பூர்ணா ஸ்ரீ வெண்கல பதக்கம் வென்றனர்.
முதலிடம் பெற்ற 8 பேர் மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றனர். பள்ளிக்குழுத் தலைவர் செல்லத்துரை, செயலர் கிருஷ்ணன், தலைமையாசிரியை இந்துமதி, உடற்கல்வி இயக்குநர் வசந்தி, உடற்கல்வி ஆசிரியை உமா பாராட்டினர்.